செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

CHAT TAMILBOX

01.04.2011 ஊடகச் செய்தித் திரட்டு

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை!- விக்கிலீக்ஸ்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய மகசின் சிறைச்சாலையில் சிங்கள கைதி ஒருவர் தற்கொலை
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை புதிதாக றிமாண்ட செய்யப்பட்ட (டி பிரிவில்) 24 வயதுடைய சிங்கள கைதி ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் அங்குள்ள குளியலறையில் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மர்மப்படகில் கடத்தப்பட்டதை தமிழக மீனவர்கள் கண்டுள்ளனர்
பிரஸ்தாப கடற்படை வீரர்கள் நால்வரும் தங்கள் ஆயுதங்களுடன் இன்னொரு படகில் ஏற்றப்பட்டதை தமிழக மீனவர்கள் கண்டிருப்பதாக தமிழ்நாடு புலனாய்வுத்துறையினரை மேற்கோள் காட்டி தினமலர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் ஆயுதப் பரம்பலை கட்டுப்படுத்த அமெரிக்காவும் இலங்கையும் இணைவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் ஆயுத பரம்பலை கட்டுப்படுத்தும் சர்வதேச நடவடிக்கைகள், கந்த 2006ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் அடிப்படையில் ஜெயலலிதா தமிழகத்தில் வெற்றி பெறுவார் -இந்தியா ருடே
இலங்கை தமிழர் விடயத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது
லங்கா ஈ நியூஸ் இணையத்தள செய்தி ஆசிரியருக்கு விளக்கமறியல்
அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இணைய தளம் ஒன்றின் ஆசிரியர், மிரட்டல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார். லங்கா ஈ நியூஸ் என்னும் செய்தி இணைய தளத்தின் செய்தி ஆசிரியரான பென்னட் ரூபசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அதிகாரிகளுக்கு பணிப்பு!
முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ள இம்மாவட்டத்தை மீள கட்டியெழுப்பும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்தி மேற்கொள்ளுமாறு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் அதிகாரிகளை பணித்துள்ளார்.
இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18 கோடிக்கும் மேல் அதிகரித்து 121 கோடியாக உயர்ந்துள்ளது. இது உலகின் மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் பத்திரிகைகள் பாராட்டு
மொஹாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதி கிரிக்கெட் போட்டியைக் காரணமாகக் கொண்டு உறவை சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸப் கிலானியையும் பாகிஸ்தான் பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன.
துஷாரா கண்விழிப்பு : சந்தேக நபரை கண்டுபிடிக்க 50,000 யூரோ: லண்டன் காவற்துறை அறிவிப்பு
லண்டனில், நேற்று இடம்பெற்ற இரு வன்முறைக்குழுக்களின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அகப்பட்டுக்கொண்ட ஐந்து வயது இலங்கை தமிழ் சிறுமியான துஷாரா, ஆபத்தான ஆபத்தான நிலையை தாண்டி, கண் விழித்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு இலண்டணின் Ilford நகரில் வசிக்கும் துஷாரா, தனது மாமாவை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுக்க சென்ற தனது உறவினரொருவருடன் சென்ற போது Stockwell நகரில் வைத்து, இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு இலக்கானார்.
இலங்கைஇந்திய இறுதிப்போட்டிக்கு முன்னொருபோதுமில்லாத கடும் பாதுகாப்பு: வான்,கடல் மார்க்கங்களில் கடும் கண்காணிப்பு
இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் மும்பையில் வான்கடே விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை இடம்பெறும் உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியையிட்டு முன்னொருபோதுமில்லாத வகையில் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

31.03.2011 ஊடகச் செய்தித் திரட்டு

இலங்கை அகதியொருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை முயற்சி
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதியொருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவர் மைக்கேல் கிளர்க்!
அவுஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக மைக்கேல் கிளர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகம் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது!
மட்டக்களப்பு பல்கலை கழக விடுதியில் தங்கி இருந்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் பொலிஸார் தலையிட்டு தமிழ் மாணவர்கள் 5 பேரை தாக்கியமையால் மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் 5 வயது சிறுமி உட்பட இருவர் படுகாயம்!
தெற்கு லண்டன் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான பலசரக்கு கடை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 வயது சிறுமியும் 35 வயதுடைய கடைஉரிமையாளரும் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவில் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படைப்படகுடன் 4 கடற்படையினர் மாயம்!
முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகுடன் 4 கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் மக்கள் மீள் குடியமர்ந்த சில பகுதிகளில் அதிகாலை முதல் படையினர் தேடுதல்
மக்கள் அண்மையில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட உடுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் படைத்தரப்பு பெரும் எடுப்பிலான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஆயிரக் கணக்கில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் உள்ளேயோ வெளியேயோ செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஆறு மாதத்திற்கு நீடிப்பு
கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுகிறது. 2011 ஜுலை 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 22 உள்ளூராட்சி சபைகளும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதற்கு 2011ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகாமைத்துவ கட்டளையின்கீழ் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் 29ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
த.ம.வி.பு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவியேற்பு
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பாக போட்டி இட்டு வெற்றி பெற்றவர்களுக்கான உத்தியோக பூர்வ பதவியேற்பு நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கட்சி தலைமைய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பபலரும் கலந்து கொண்டனர்
முன்னாள் போராளிகள் 205 பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்
புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 206 பேர் நாளை விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்
ஐ.தே.க.வை பிளவுபடுத்த எந்தவொரு நபருக்கும் இடமளியேன்: ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்திவிடலாம் என எந்தவொரு நபரும் கனவு கண்டு விடக்கூடாது. அவ்வாறு இடம் பெறுவதற்கு கட்சித் தலைவர் என்ற வகையில் எவருக்கும் நான் இடமளிக்க மாட்டேன்
13வது திருத்தத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கலை கோருமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது - மாவை சேனாதிராசா!
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகார பரவலாக்கத்தை கோருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்தியா அறிவுறுத்தியுள்ளது
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்: முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முகமூடி அணிந்த 2 மர்ம மனிதர்கள் அந்த கோவில் மீது துப்பாக்கியால் பல முறை சுட்டனர். இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவில் உள்ளது நிïசவுத் வேல்ஸ் மாநிலம். இங்கு உள்ள அபுபர்ன் என்ற இடத்தில் ஸ்ரீமந்திர் என்ற பெயரில் ஒரு இந்து கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 19-ந்தேதி தாக்கப்பட்டது. அன்று இரவு முகமூடி அணிந்த 2 பேர் அந்த கோவில் மீது துப்பாக்கியால் பல முறை சுட்டனர். கோவில் வாசல் அருகே உள்ள சுவர் மீது சில குண்டுகள் தாக்கின.
வன்னி திரும்பிய முதியவர்கள் பலர் வறுமை,தனிமையால் பரிதவிப்பு உதவ நிதி இல்லையெனக் கை விரிக்கும் தொண்டர் அமைப்புக்கள்
மோதலினால் இடம்பெயர்ந்து பின்னர் வட பகுதிக்கு திரும்பிச் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பிளேக்குடன் தமிழ் தூதுக்குழு சந்திப்பு
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு காணும் விடயம் தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகார உதவி அமைச்சர் ரொபோ்ட் பிளேக்கை உலகத் தமிழர் பேரவையின் தூதுக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது,
எந்த நிலை வந்தாலும் கப்பல் விளம்பரத்தை அகற்ற மாட்டோம் - கனடா கண்சவெட்டிக் கட்சி
கனடாவில் வெளியிடப்பட்ட அகதிகளை குற்றவாளிகளாகக் காட்டும் விளம்பரத்தை கனடா கண்சவெட்டிக் கட்சி அகற்ற வேண்டுமென்றும் கனடியப் பிரதமர் இந்த விளம்பரத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய தமிழ்த் தேசிய மக்களவை கண்சவெட்டிக் கட்சியை நிர்ப்பந்தித்திருந்தது.
மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள்
மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக அறியமுடிகின்றது.

தமிங்கில தேசிய அமைப்புக்களின் சனநாயகம்

தமிங்கில தேசிய அமைப்புக்களின் சனநாயகம்
2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட படைக்கருவிகள் மௌனிக்கப்பட்டதும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்ததை முன்னெடுக்கும் கொள்கையுடன் பல தமிழ் தேசிய அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத்தமிழர் பேரவை மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் உருவாக்கப்பட்ட பேரவைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

30.03.2011 ஊடகச் செய்தித் திரட்டு

நியூஸிலாந்து அணியை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்களில் 217 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை பந்துவீச்சாளர்களில் அஜந்த மெண்டிஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் முத்தையா முரளிதரன் ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
யாழ் மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனான சந்திப்பில் நோர்வே தூதுவர்
யாழ் மாவட்டம் அதிசயிக்கத்தக்க வகையில் அபிவிருத்தி கண்டு வருகின்றது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ட்ஸ்ரட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானி​யாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படு​ம் தமிழர்கள் - ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம் ! மூவர் தற்கொலை முயற்சி!!
பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதையால் பாதிக்கப்பட்ட யாழ். கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வைத்தியசாலையில்!
பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் 10 பேர் சிகிச்கைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்தை முழுமையாக கைவிடும் பரிதாப நிலையில் மட்டு மாவட்ட விவசாயிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை அரசாங்கத்தால் எதுவித நட்ட ஈடுகளும் வழங்கப்படாத நிலையில், அப்பாதிப்பில் இருந்து மீண்டு தங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள்.
அமைச்சர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் பிரபல ஹோட்டலில் அரங்கேறும் அழகிகள் விழா!
ஆளுங்கட்சி அமைச்சர்களையும், அரச உயர் அதிகாரிகளையும் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் வாராந்தம் மொடல் அழகிகளின் ‘பேஷன் ஷோ’க்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை அளித்த இராணுவ நீதிபதிகளிடம் குறிப்பு இல்லை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை அளித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையின் போது எழுத்து மூலக் குறிப்புகள் எதனையும் வைத்திருக்க வில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஆர்ப்பாட்டம் உக்கிரம் : அமைச்சரவை ராஜினாமா
சிரியாவில் அரசுக்கெதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சரவை பதவி விலகியுள்ளது. இதனை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல்- அஸாட் உறுதிபடுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப கற்கை நெறிகளை பூர்த்தி செய்யாதோர் இறுதிப் பரீட்சைக்குத் தோற்ற வாய்ப்பு
இலங்கை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் ஒன்பது கற்கை நெறிக்கு 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறியை பூர்த்தி செய்யாத மாணவர்கள் தமது கற்கை நெறியை பூர்த்தி செய்து இறுதிப்பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் வாய்ப்பை வழங்கியுள்ளது.
கறுப்புக் கண்ணாடி அணிந்து கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
மார்ச் மாத இறுதி முதல் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களின் போது சூரியன் இலங்கைக்கு நேராக இருப்ப தனால் உஷ்ண நிலை உச்ச கட்டத்தில் இருக்கின்றது. இதனால் வியர் குரு போன்ற சரும நோய்கள் அதிகமாக ஏற்படுவதுடன் மக்களின் கண்பார் வைக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்து கின்றது. கொழும்பு கண் ஆஸ்பத்திரியின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே பகல் பொழுதில் கடும் வெயிலில் வெளியில் செல்ப வர்கள் கறுப்புக் கண்ணாடி அணிவது அவசியமென்று அறிவுறுத்துகிறார். சூரிய கதிர்களில் இருந்து வெளியேறும் அதி சக்தி வாய்ந்த புறஊதாகதிர் கண்விழிகளுக்கு தீங்கிழைக்கும் என்றும் இதனால் பார்வை மங்குதல், கண்களில் பூ விழுதல் போன்ற பலதரப் பட்ட நோய்கள் மக்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து இருக்கிறதென்று அவர் தெரிவிக்கின்றார். இவ்விதம் தொடர்ந்தும் பல நாட்களுக்கு கடும் வெயிலில் கண்ணாடி இல்லாதவர்கள் கறுப்புக் குடையொன்றை பிடித்துக் கொண்டு செல்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. கறுப்புக் கண்ணாடி அணிய வேண்டும் என்பதற்காக நடைபாதையில் விற்பனை செய்யப்படும் தரங்குறைந்த பிளாஸ்டிக் கறுப்புக்கண்ணாடிகளை அணிவதனால் கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமென்றும் அவர் கூறுகிறார். வைத்தியர்களின் சிபாரிசுக்கமைய தயாரிக்கப்படும் கறுப்புக் கண்ணாடிகள் கடைகளில் சற்றுக் குறைந்த விலைக்கு விற்கப்படுவதனால், பணக்கஷ்டம் உள்ளவர்கள் அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். கறுப்புக் கண்ணாடியை வாங்குவதற்கு சிறிதளவேனும் பணமில்லாதவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் பகல் பொழுதில் தங்கள் வசிப்பிடங்களில் முடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த வைத்தியர் கூறுகிறார்.
உள்ளூராட்சி சபைகளை வலுப்படுத்த சட்டதிருத்தம்: ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி
விருப்பு வாக்கு சண்டை சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்க ளையும், சேறுபூசும் நடவடிக்கைகளையும் நம்பாது நாட்டு மக்கள் தொடராக எமக்கு ஆணை வழங்கி வருகின்றார்கள்.
புதிய துணைவேந்தராக வசந்தி நேற்று நியமனம் இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண்
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக மருத்துவ பீடபேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பதவியேற்கின்ற முதல் பெண் துணைவேந்தர் இவரே. இவரது நியமனத்தின் மூலம் இனிவரும் காலங்களில் யாழ். பல்கலைக்கழகம் கல்வி மற்றும் வளங்களில் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என்று குடாநாட்டின் கற்றறிந்தோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கும் கடிதம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.யாழ்.பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் தெரிவுப்படி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருந்தார். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், தற்போதைய பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோர் தலா 9 வாக்குகளைப் பெற்று அடுத்த நிலையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நடைமுறையின் பிரகாரம் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் பெயர்களை பல்கலைக்கழகப் பேரவை பரிந்துரைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்காக அனுப்பி வைத்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பின்னர் துணைவேந்தர் ஒருவரை ஜனாதிபதியே நியமிப்பார். மாதக்கணக்கில் இந்நியமனம் இடம்பெறாமல் இழுபறிப்பட்டு வந்தது. அதன் பின் கடந்த வருட இறுதியில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

29.03.2011 ஊடகச் செய்திகளின் தொகுப்பு

இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கை-நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை
மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் பலப் பரீட்சை நடத்தவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்த போட்டியில் இரு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் விளையாடவுள்ளன.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முன் "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனா"க நடித்த ஜனாதிபதி
வடபகுதிக்கு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாதது ஏன் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளரைக் கடிந்து கொண்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு அந்தஸ்திருந்தும் இன்றுவரை அதனை அமுல்படுத்த நடவடிக்கை இல்லை:நல்லிணக்க ஆணைக்குழு முன் ஹென்றி மகேந்திரன்!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு இதுவரை உரிய மதிப்பு வழங்கப்படவில்லை. அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழியென்று எழுதப்படவில்லை.
விட்டுக்கொடுப்புடன் மனந்திறந்து பேசினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணலாம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வடபகுதியில் விரைவில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமது கட்சி தனித்து அல்லது மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து “அபிவிருத்தியும் அதிகாரப் பகிர்வும்” என்ற தொனிப்பொருளில் போட்டியிட விரும்புகிறது
சூதாட்டக்காரர்களை மடக்கிப்பிடிக்க கொழும்பில் இன்டர்போல் அதிகாரிகள்!
உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. கொழும்பு கெத்தாராம ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.
31ம் திகதி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை
தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்று எதிர்வரும் 31ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையம் நிர்மாணிக்க நடவடிக்கை!
ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பஸ்களில் மிதிபலகை பயணத்துக்கு தடை
பஸ்களில் மிதிபலகையில் பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் மிதிபலகையில் நின்று கொண்டு மக்கள் பயணம் செய்வதற்கு இடமளிக்கும் இலங்கை போக்குவரத்து சபை தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலந்து நாட்டு கார் தொழிற்சாலையை கையகப்படுத்த டாடா முயற்சி?
போலந்து நாட்டை சேர்ந்த கார் தொழிற்சாலையை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. tatafsoஉலக அளவில் கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கவும், வர்த்தகத்தை பரப்பும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்நகர்த்துவதற்கு அமெரிக்கா பிரதான பாத்திரமொன்றை வகிக்க விரும்பியது - நிருபமா சுப்பிரமணியன்
ஸ்ரீலங்கா இந்தியாவிடம் தான் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்குள் தமிழர் பகுதிகளில் ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவதாகச் சொன்னது. ஆனால் இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட வகையில் அந்த உறுதிமொழியில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள். அமெரிக்க தூதுரகத்தின் பல தந்திகளை விக்கிலிக்ஸ் மூலமாக த ஹிந்துவுக்கு காணக் கிடைத்ததன் பேறாக வெளிப்பட்டது.
வட பகுதியின் நிலைமையைப் பார்த்து கவலையடைந்த அயன் போத்தம்
கிரிக்கெட் விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் சேர் அயன் போத்தம் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.