| இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை!- விக்கிலீக்ஸ் |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
|
| புதிய மகசின் சிறைச்சாலையில் சிங்கள கைதி ஒருவர் தற்கொலை |
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை புதிதாக றிமாண்ட செய்யப்பட்ட (டி பிரிவில்) 24 வயதுடைய சிங்கள கைதி ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் அங்குள்ள குளியலறையில் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
|
| மர்மப்படகில் கடத்தப்பட்டதை தமிழக மீனவர்கள் கண்டுள்ளனர் |
பிரஸ்தாப கடற்படை வீரர்கள் நால்வரும் தங்கள் ஆயுதங்களுடன் இன்னொரு படகில் ஏற்றப்பட்டதை தமிழக மீனவர்கள் கண்டிருப்பதாக தமிழ்நாடு புலனாய்வுத்துறையினரை மேற்கோள் காட்டி தினமலர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
|
| புலிகளின் ஆயுதப் பரம்பலை கட்டுப்படுத்த அமெரிக்காவும் இலங்கையும் இணைவு |
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் ஆயுத பரம்பலை கட்டுப்படுத்தும் சர்வதேச நடவடிக்கைகள், கந்த 2006ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
|
| இலங்கை தமிழர் பிரச்சினையில் அடிப்படையில் ஜெயலலிதா தமிழகத்தில் வெற்றி பெறுவார் -இந்தியா ருடே |
இலங்கை தமிழர் விடயத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது
|
| லங்கா ஈ நியூஸ் இணையத்தள செய்தி ஆசிரியருக்கு விளக்கமறியல் |
அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இணைய தளம் ஒன்றின் ஆசிரியர், மிரட்டல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார். லங்கா ஈ நியூஸ் என்னும் செய்தி இணைய தளத்தின் செய்தி ஆசிரியரான பென்னட் ரூபசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
|
| கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அதிகாரிகளுக்கு பணிப்பு! |
முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ள இம்மாவட்டத்தை மீள கட்டியெழுப்பும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்தி மேற்கொள்ளுமாறு ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் அதிகாரிகளை பணித்துள்ளார்.
|
| இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம் |
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18 கோடிக்கும் மேல் அதிகரித்து 121 கோடியாக உயர்ந்துள்ளது. இது உலகின் மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.
|
| பாகிஸ்தான் பத்திரிகைகள் பாராட்டு |
மொஹாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதி கிரிக்கெட் போட்டியைக் காரணமாகக் கொண்டு உறவை சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸப் கிலானியையும் பாகிஸ்தான் பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன.
|
| துஷாரா கண்விழிப்பு : சந்தேக நபரை கண்டுபிடிக்க 50,000 யூரோ: லண்டன் காவற்துறை அறிவிப்பு |
லண்டனில், நேற்று இடம்பெற்ற இரு வன்முறைக்குழுக்களின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அகப்பட்டுக்கொண்ட ஐந்து வயது இலங்கை தமிழ் சிறுமியான துஷாரா, ஆபத்தான ஆபத்தான நிலையை தாண்டி, கண் விழித்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு இலண்டணின் Ilford நகரில் வசிக்கும் துஷாரா, தனது மாமாவை சந்தித்து பிறந்த நாள் பரிசு கொடுக்க சென்ற தனது உறவினரொருவருடன் சென்ற போது Stockwell நகரில் வைத்து, இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு இலக்கானார்.
|
| இலங்கைஇந்திய இறுதிப்போட்டிக்கு முன்னொருபோதுமில்லாத கடும் பாதுகாப்பு: வான்,கடல் மார்க்கங்களில் கடும் கண்காணிப்பு |
இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் மும்பையில் வான்கடே விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை இடம்பெறும் உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியையிட்டு முன்னொருபோதுமில்லாத வகையில் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
|
0 comments:
Post a Comment