இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
,வருகைக்கு நன்றி.
| இலங்கைக்கு தனிநபரால் வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை! |
கடவத்தை மஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஹேமலதா மாலினி ஆரியரத்ன என்ற கோடீஸ்வரப் பெண்மணி தனக்குச் சொந்தமான 480 மில்லியன் ரூபா (48கோடி) பெறுமதியான சொத்துக்களை சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
|
| ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் � சிறீலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் பலி? |
ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் தொடர்அணி ஒன்றின்மீது நடாத்தப்பட்ட திடீர் கெரில்லா தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டிருக்கின்றது.
|
| மட்டு. மருத்துவமனைக்குள் கொலைகள் செய்தவர் நோர்வேயில் கைது |
புலிகளின் பொட்டம்மான் குழுவினருடன் இணைந்து மட்டகளப்பில் கொலை செய்த ஒருவர் தனது செயல்களை ஒத்துகொண்டதை தொடர்ந்து 5 வாரத்திற்கு மேலும் சிறையில் அடைக்கபட்டுள்ளார். இதே நெரம் நொர்வேயில் இருந்து இலங்கைக்கு தமிழர்கள் அவர்களின் புலி செயற்பாடுகள் தொடர்பாக விசாரிக்க விசேட பொலிஸ் படையனி ஒண்று சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதே நேரம் நொர்வேயில் உள்ள இலங்கை தமிழரை நாடுகடத்தும் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இலங்கையின் அனைத்து மாவட்டத்திற்கும் நோர்வே அரச தூதுக்குழு ஒண்று சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளது. நோர்வேக்கும் நோர்வே அரசிற்கும் எதிராக தீவிர பிரச்சாரத்தில் தமிழ்நெட் ஈடுபட்டுள்ள நிலையில் நோர்வே தமிழருக்கு எதிரான நிண்டகால திட்டங்களை வகுத்துள்ளதாக தெரியவருகிறது.
|
| புலிகள் 2002 லிருந்து 2009 வரை மிரட்டி பணம் பறித்தார்கள். நோர்வேத் தமிழர் வழக்கு. |
புலிகளியக்கத்தினர் 2002ம் ஆண்டுப் பகுதியில் தனது வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்து 2009ம் ஆண்டுவரை பலவந்தமாக பணம்பறித்தாக நோர்வேவாழ் இலங்கைத் தமிழர் ஒருவர் நோர்வேயில் புலிகளியக்கத்தினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
|
| மனோ கணேசனுக்கு கூட்டமைப்பு அழைப்பு! |
அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து இயங்குவதற்கு தம்முடன் இணைந்து செயற்படுமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
|
| முறிகண்டியில் பஸ் தடம்புரண்டதில் பத்துக்கும் அதிகமானோர் காயம்! |
இன்று காலை முறிகண்டிக்கு அண்மையில் பஸ் வண்டி ஒன்று தடம் புரண்டதில் அதில் பயணித்த பத்துக்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற தனியார் சொகுசு பஸ் வண்டியே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
|
| கொழும்பு தலைநகரக் கூட்டுத்தாபனம் உருவாக்கம் |
கொழும்பு மாநகருக்கு உட்பட்ட 4 மாநகர சபைகள் மற்றும் ஒரு பிரதேச சபை என்பவற்றை ஒன்றிணைத்து கொழும்பு தலைநகர கூட்டுத்தாபனம் ஒன்றை ஏற்படுத்தி அந்த பிரதேசத்திற்கு பொறுப்பாக ஆளுநர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
|
| தனியார் மருந்தகங்களில் அப்டமின் - பி விற்பனை செய்ய இடைக்காலத் தடை |
தனியார் மருந்தகங்களில் அப்டமின் - பி கலவை மருந்தினை விற்பனை செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவினை தேசிய ஒளடத அதிகார சபை பிறப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
|
| பால், குடிநீர் போன்றனவற்றில் கதிர்வீச்சுப் பாதிப்பு: நிபுணர்கள் எச்சரிக்கை |
ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் ஏற்பட்ட அணு உலை வெடிப்பு காரணமாக பால் மற்றும் குடிநீரில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டோ க்கியோ நகரில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களிலும் அணு கதிர் வீச்சின் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
|
| 'போராளிகள் சமூகத்தால் புறக்கணிப்பு - பிபிசி' |
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களாகியிருக்கின்ற நிலையில் வடபகுதியில் இருக்கும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பலர் தாம் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதாக கூறியிருக்கிறார்கள். தேசிய மட்டத்திலான நல்லிணக்க நடவடிக்கைகளில் அவர்களை உட்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பலரும் பேசிவருகின்ற சூழ்நிலையில், தொழில், பாதுகாப்பு, திருமணம், வீட்டு வசதி போன்ற பல வகைகளிலும் தாம் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதாக அவர்களில் பலர் கூறியுள்ளனர். பல முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்ய தமது குழந்தைகளை அனுமதிக்க பல பெற்றோர் தயக்கம் காட்டுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அதேபோன்று தமது சொந்த ஊரிலேயே தமக்கு இருக்க வாடகைக்குக் கூட இடம் தர மறுக்கப்படுவதாக ஒரு முன்னாள் பெண் போராளி கூறுகிறார். இவ்வாறு பல வகைகளிலும் புறக்கணிக்கப்படும் முன்னாள் போராளிகள் ஒரு உத்தரிப்பு நிலையில் இருப்பதாக செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் கூறுகிறார். விடுதலைப்புலிகளின் ஆட்சியின் போது கலப்புத்திருமணம் செய்த போராளி தம்பதிகளில், ஆண் காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்தால் சாதியை காரணம் காட்டி அவரது மனைவி புறக்கணிக்கப்படுவதான நிலைமையும் யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாக யாழ் அரச சார்பற்ற ஒன்றியங்களின் தலைவரான கேசவன் தெரிவித்துள்ளார். தாம் புறக்கணிக்கப்படும் நிலைமை காரணமாக பல முன்னாள் போராளிகள், விடுதலைப்புலிகளால் முன்பு எதிரிகளாக கணிக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குமரன் பத்மநாதன் ஆகியோரின் உதவியை நாடி செல்லும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அரவிந்தன் கூறுகிறார். தம்மிடம் வரும் முன்னாள் போராளிகளுக்கு தாம் உதவுவதாகக் கூறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆயினும் அவர்களது பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க பல காலம் பிடிக்கும் என்றும் கூறுகிறார்.
|
| அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சாதகமாக முன்னோக்கி நகர்கிறது |
ஸ்ரீலங்காஅரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்(ரி.என்.ஏ) இடையே தற்பொழுது நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில், மார்ச் 18, வெள்ளிக்கிழமை நடந்த அதன் மூன்றாவது கட்டப் பேச்சுக்கள் சில சாதகமான முன்நகர்வுகளைப் பதிவு செய்திருக்கின்றன.
|
0 comments:
Post a Comment