செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

26.03.2011 ஊடகச் செய்திகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
60 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு அவசியம் என்கிறார் ஜனாதிபதி
60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வு அவசியம். எனினும் இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உடனடியாக ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல்
வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்குமுறை ஆட்சியை முழுநாடும் விரைவில் அனுபவிக்க நேரிடும்- சோமவன்ச
அரசாங்கத்தின் வியூகங்கள் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன. தற்போது வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்கு முறையிலான ஆட்சியை எதிர்வரும் நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் அனுபவிக்க நேரிடும்
புதுடெல்கி நோக்கிய 2570 கிலோ மீற்றர் நடைபயணம் 68வது நாள் சிறப்பு கூட்டத்துடன் நிறைவுபெற்றது!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த கோரியும், வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரியும் இந்திய அரசை வலியுறுத்தி சென்னையில் இருந்து புதுடெல்கி நோக்கிய 2570 கிலோ மீற்றர் நீண்டதூர நடைபயணம்

கைதிகளின் மனநலத்தை மேம்படுத்த நடவடிக்கை
சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மனநலத்தை மேம்படுத்துவதற்காக பல விஷேட வேலைத்திட்டங்கள் முன் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ ஆர் த சில்வா தெரிவித்துள்ளார்.
5 விமான நிலையங்களை தரமுயர்த்த வர்த்தகர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளவுள்ளது - அமைச்சர் பிரியங்க ஜயரத்ன
புதிதாக ஐந்து வர்த்தக விமான நிலையங்களை அமைக்கும் விமான சேவை வேலைத்திட்டத்திற்கு இலங்கை வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
பாடசாலைகள் அனைத்தும் சகல வளங்கள் கொண்ட பாடசாலைகளாக மாற்றப்படும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
எதிர்காலத்தில் இம்மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் அனைத்து வளங்களும் கொண்ட ஒரு நிறைவான பாடசாலைகளாக மாற்றப்பட்டு தரமான கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்

0 comments:

Post a Comment