| நாமல் ராஜபக்ஷ தனியான ஊடகப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளார் : |
ஜனாதிபதியின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனியான ஓர் ஊடகப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
| காணி, காவல்துறை அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது |
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் காவல்துறை அதிகாரங்களையும், காணி மற்றும் வன வள அதிகாரங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோரிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
| நாடுகடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணியின் அரசவை உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாணம் |
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பு, அது நிறைவேற்றப்பட்ட விதம் ஆகியவற்றில் ஜனநாயக ரீதியாக எழுந்த கருத்து முரண்பாடுகளை ஒருபுறம் கையாளும் அதேவேளை, அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்கக் கட்டமைப்பின் செயற்பாடுகள் நல்லமுறையில் இடம்பெறவேண்டும் என்பதற்கான ஒத்துழைப்பை நாடு கடந்த அரசாங்கத்திற்கு வழங்குவோம் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
|
| போரினால் கிழக்கில் 13,000 மக்கள் அங்கவீனம். |
சிறீலங்காவின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் அங்கு 13,000 பேர் அங்கவீனம் அடைந்துள்ளர்.
|
| இன்ரபோல் தேடப்படுவோர் பட்டியலில் புலிகளின் முஸ்கியஸ்தர் சங்கர். |
இன்ரப்போல் தேடப்படுவோர் பட்டியலில் சங்கர் இணைக்கபட்டுள்ளார். THANIKASALAM SRISANKAR என்ற இயற்பெயழர கொண்ட இவர் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாக தெரியவருவதாக இன்ரப்போல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளின் பல்வேறு கட்டமைப்புகளில் வேலை செய்த இவர் நீண்டகால புலனாய்வு அனுபவங்களை கொண்டவர் என்று தெரியவருகிறது. இண்று இவர் இன்ரப்போலின் தேடப்படவோர் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் இன்ரப்போல் பகுதியினரின் பயங்கரவாத தேடல் பிரிவினால் கடைசியாக சர்வதேச பட்டியலில் இணைக்கபட்டவராவார். இலங்கை அரசு இவர்களை கைது செய்ய அனைத்து நாட்டு உள்ளுர் பொலிசாரின் உதவியையும் நாடி உள்ளதாக தெரியவருகிறது. நன்றி: தமிழ்நியூஸ்வெப்
|
| விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை விரும்பியிருந்தது: விக்கிலீக்ஸ் |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
|
| தமிழ்க் கைதிகளின் நிலை அறிய சரவணபவன் எம்.பி சிறைச்சாலைகளுக்கு நேரில் விஜயம் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் நேற்று வெள்ளிக்கிழமை அநுராதபுரம், வவுனியா சிறைச்சாலைகளுக்கு நேரில் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் நலன் தொடர்பாக அந்தந்தச் சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
|
| ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை |
ஆளும் அரசாங்கத்தின் முதன்மைக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் சிலரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
| அரசு தமிழ்க்கூட்டமைப்பு பேச்சில் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் : மாவை |
அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாகக் தெரிவித்த மாவை சேனாதிராஜா, எம்.பி. முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகவும் கூறினார்.
|
| ஹபரணையில் புலிகள் தாக்குதலா? மறுக்கிறது இராணுவம் |
ஹபரணை காட்டுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 24ம் திகதி இரவு தாக்குதல் நடத்தியதாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தியை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. அமைதியான நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் சில இணையத்தளங்கள் இவ்வாறான செய்துயை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24ம் திகதி இரவு 10:22 மணியளவில் ஹபரணைக் காட்டுப்பகுதியில் இலங்கை படைகளின் தொடரணி மீது நடாத்தப்பட்ட கெரில்லா தாக்குதலில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இணையத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடி ஏந்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத் தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே ஹபரணை தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த தகவல் விடுதலைப் புலிகளின் புதுவகையான பிரச்சாரம் என இலங்கை இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். நன்றி: தேனீ இணையம்
|
| யாழ். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சி: ஹத்துருசிங்க |
யாழ்ப்பாணத்திலுள்ள மக்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.யாழில் தொடரும் இராணுவ பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேற்படி அரசியல்வாதிகள் முன்வைத்து வருவதால் மக்கிளிடையே மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். நன்றி: தேனீ இணையம்
|
0 comments:
Post a Comment