இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
,வருகைக்கு நன்றி.
| உயிர் தியாகம் செய்தாலும் செய்வேனே தவிர மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன் |
லிபியா அதிபர் கடாபி மக்கள் முன் தோன்றி பேசினார். அப்போது உயிர் தியாகம் செய்தாலும் செய்வேனே தவிர, மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன் என்று அறிவித்தார். வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் 41 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்படி போராட்டம் நடத்தும் மக்கள் மீது லிபிய ராணுவம் குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. மக்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ராணுவம் லிபியா நாட்டில் திரிபோலி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. |
0 comments:
Post a Comment